பெட்டாலிங்ஜெயாவை நோக்கி செல்லும் ஜாலான் சுங்கை பீசி சாலை, நாளை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி கட்டங் கட்டமாக மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிரம்பானுக்கு செல்லும் அந்த பிரதான சாலை அக்டோபர் 2 ஆம் தேதி திங்கட்கிழமை வரை அனைத்து போக்குவரத்துக்கும் மூடப்படும் என்று கோலாலம்பூர் மாநகர் மன்றம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஃப்ரேசர் வர்த்தக மையத்திற்கு முன்புறம் உள்ள லோக் இயூ வட்டச்சாலை அனைத்து போக்குவரத்துக்கும் மூடப்படும். அப்பகுதியில் உள்ள பாலத்தை அகலமாக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் ஜாலான் சுங்கை பீசி சாலை அக்டோபர் 2 ஆம் தேதி வரை மூடப்பட்டு இருக்கும் என்று மாநகர் மன்றம் அறிவித்துள்ளது.








