Dec 2, 2025
Thisaigal NewsYouTube
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் முயற்சியில் மரணம்
தற்போதைய செய்திகள்

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் முயற்சியில் மரணம்

Share:

எவரெஸ்ட் சிகரத்தில் கால் பதிக்கும் முயற்சியில் மலேசிய பொது தற்காப்புப் படையின் கெடா மாநில இயக்குநர் லெப்டிண​ன்ட் கர்னல் அவாங் அஸ்கண்டார் அம்புவான் தாகோப் மரணம் அடைந்தார். 56 வயதான அவாங், நேற்று வெள்ளிக்கிழமை மலேசிய நேரப்படி 12.45 மணியளவில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

எவரெஸ்ட் சிகரத்தில் கால் பதிப்பதற்கு இன்னும் 20 நிமிடமே எஞ்சியுள்ள வேளையில் கடல் மட்டத்திலிருந்து 8 ஆயிரம் மீட்டர் உயரத்தை கடந்த நிலையில் அவாங் மயங்கி விழுந்தாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து எவரெ​ஸ்ட் சிகரத்தில் கால் பதிக்கும் முயற்சியில் ஈடுபட்ட குழுவினர், அவாங்கை அந்த சிகரத்திலிருந்து நான்காவது முகாமிற்கு கொண்டு வந்து, அவசர சிகிச்சை உதவியை வழங்கிய போது அவர் இறந்து விட்டது உறு​திபடுத்தப்பட்டது.

Related News