Sep 12, 2026
Thisaigal NewsYouTube
பணிநீக்கத்தை எதிர்த்து தொழில்துறை நீதிமன்றம் செல்லும் சோலேஹா
தற்போதைய செய்திகள்

பணிநீக்கத்தை எதிர்த்து தொழில்துறை நீதிமன்றம் செல்லும் சோலேஹா

Share:

சர்ச்சைக்குரிய கருத்துகளால் கவனம் பெற்ற பேராசிரியர் டாக்டர் சோலேஹா யாக்கூப், மலேசிய அனைத்துலக இஸ்லாமிய பல்கலைக்கழகமான UIAM, தம்மை பணிநீக்கம் செய்ததை எதிர்த்து தொழில்துறை நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளார்.

கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி முதல் தமது சேவை நிறுத்தப்பட்டதாக யூ.ஐ.ஏ.எம் அறிவித்திருந்தது.

ஆனால், வெறும் 24 மணி நேரத்திற்குள் தாம் பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும், அந்த முடிவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யக்கூட தமக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும் சோலேஹா குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், ஆறு மாத சம்பளத்துக்கு சமமான இழப்பீட்டை வழங்க யூ.ஐ.ஏ.எம் முன்வந்தபோதும், அதனை தாம் நிராகரித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ரோமானியர்களுக்கு கப்பல் கட்டும் தொழில்நுட்பத்தை கற்றுத் தந்தவர்கள் மலாய்க்காரர்கள் என்றும், குங் ஃபூ தற்காப்புக் கலை பயிற்சியையும் மலாய்க்காரர்களே கற்றுக் கொடுத்தனர் என்றும் சோலேஹா தெரிவித்திருந்த கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

Related News

எல்பிடி விபத்தில் பலி 5 எண்ணிக்கை ஆக உயர்வு – 11 நாட்களுக்குப் பிறகு 18 வயது இளைஞர் உயிரிழப்பு

எல்பிடி விபத்தில் பலி 5 எண்ணிக்கை ஆக உயர்வு – 11 நாட்களுக்குப் பிறகு 18 வயது இளைஞர் உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு?  2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு? 2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி