கோலாலம்பூர், டிசம்பர்.29-
வரும் ஜனவரி மாதம் தொடக்கத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மலேசிய வானிலை ஆய்வு மையமான மெட்மலேசியா அறிவித்துள்ளது.
இந்த பருவமழை மாற்றத்தினால் குறிப்பாக சரவாக் மாநிலத்தில் தொடர்ச்சியான கனமழை பெய்யக்கூடும்.
தென் சீனக் கடல் பகுதிகளில் பலத்த காற்றும், கடல் கொந்தளிப்பும் ஏற்பட வாய்ப்புள்ளதாக மெட்மலேசியா தலைமை இயக்குநர் டாக்டர் முஹமட் ஹிஷாம் முஹமட் அனிப் தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவும் வடகிழக்கு பருவமழை வரும் மார்ச் 2026 வரை தொடரும் என்பதால், தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் வெள்ள அபாயம் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.








