கோலாலம்பூர், நவம்பர்.15-
வட கிழக்கு பருவமழை தொடங்கிவிட்ட நிலையில் நாட்டில் மாலை வேளைகளில் தொடர்ந்து இடியுடன் கூடிய கனத்த மழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வுத்துறையான மெட்மலேசியா ஆருடம் கூறியுள்ளது.
கெடா, பேராக், கிளந்தான், திரெங்கானு, சிலாங்கூர், நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களில் கனத்த மழை பெய்யும் என்று அது எச்சரித்துள்ளது.








