Sep 24, 2026
Thisaigal NewsYouTube
குழு கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய நபர் கைது
தற்போதைய செய்திகள்

குழு கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய நபர் கைது

Share:

கடந்த மார்ச் 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற குழு கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய உள்ளூர் நபர் ஒருவர் கடந்த வார வெள்ளிக்கிழமை போலீஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

20 வயதுகளுக்கு மேற்பட்ட அந்தச் சந்தேக நபர், செராஸ் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடத்திய தொடர் விசாரணையிலும், ரகசியத் தகவலின் அடிப்படையிலும் பிடிபட்டார். அந்தச் சோதனையின் போது, கொள்ளைச் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் ஒரு ஜோடி ஜீன்ஸ் பேண்ட் மற்றும் காலணிகளை போலீஸ் பறிமுதல் செய்துள்ளனர்.

சம்பவம் குறித்து செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர், உதவி ஆணையர் மோட் ரோஸ்டி தாவூத் கூறுகையில், கைது செய்யப்பட்ட நபர் மீது தண்டனைச் சட்டம் பிரிவு 395-இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அந்த நபரைத் தற்போது ஏழு நாட்கள் தடுப்புக் காவலில் வைத்துள்ளதாகவும், தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Related News