Jul 31, 2026
Thisaigal NewsYouTube
வழிபாடு செய்த பெண்ணைத் திட்டிய ஆடவர் மீது போலீஸ் புகார்
தற்போதைய செய்திகள்

வழிபாடு செய்த பெண்ணைத் திட்டிய ஆடவர் மீது போலீஸ் புகார்

Share:

ஜோகூரில் இந்தியக் குடும்பம் செய்த வழிபாட்டைத் தொந்தரவு எனக் கருதி வாய்ச்சண்டை தகராறில் ஈடுபட்டதாக நம்பப்படும் அண்டை வீட்டைச் சேர்ந்த ஆடவர் ஒருவருக்கு எதிராக இந்திய மாது போலிசில் புகார் செய்துள்ளார்.

ஜோகூர், தாமான் யூனிவெர்சிட்டியில் உள்ள மெலாவிஸ் அடுக்குமாடிக் குடியிருப்பில் நடந்த இச்சம்பவம் தொடர்பில் 30 வயது காஞ்சனா மோகன் ராஜ் எனும் பெண்மணி ஜோகூர் பாரு, தாமான் யூனிவர்சிட்டி காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்துள்ளார்.

இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட மாதுவின் வாசல் கதவை அந்த ஆடவர் சேதப் படுத்தி இருப்பதாகவும் போலிஸ் புகாரில் தெரிவிக்கப்பட்டது.

தங்களின் வழிபாட்டுக்கு இடையூறு விளைவித்ததுடன் கூச்சலும் குழப்பமும் ஏற்படுத்திய அந்த ஆடவர் மீது போலிஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தம்முடைய புகாரில் காஞ்சனா குறிப்பிட்டுள்ளார்.

Related News