சிலாங்கூர் மாநிலத்தின் ஒரு பகுதியாக முன்பு விளங்கிய கோலாலம்பூர் மாநகரை, மீண்டும் அந்த மாநிலத்திற்கே திருப்பி ஒப்படைக்கப்படுவதற்கான பரிந்துரை அவசியம் இல்லாததாகும் என்று சுங்காய் சட்டமன்ற உறுப்பினர் ஆ.சிவனேசன் தெரிவித்துள்ளார்.
அதே வேளையில் சட்ட அம்சங்கள் நிறைந்த இதுபோன்ற விவகாரம் குறித்து அறிக்கை வெளியிடும் போது மிக கவனமாக செயல்பட வேண்டும் என்று சிவனேசன் கேட்டுக் கொண்டார்.
கோலாலம்பூரை சிலாங்கூர் மாநிலத்திற்கே திருப்பித் தரப்பட வேண்டும் என்று பி.கே.ஆர் கட்சியின் பெட்டாலிங் ஜெயா எம்.பி லீ சியேன் சுங் முன்வைத்துள்ள பரிந்துரை குறித்து கருத்துரைக்கையில் சிவனேசன் மேற்கண்டவாறு தெரிவித்தார். மக்களுக்கு பயனளிக்கக்கூடிய நிறைய விஷியங்களை நாடாளுமன்றத்தில் விவாதிக்கலாம். காலாவதியான விவகாரத்திற்கு புத்துயிர் அளிக்க வேண்டிய அவசியமில்லை என்று பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான சிவனேசன் வலியுறுத்தினார்.

Related News

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு

ஜகார்த்தாவில் மூன்று மலேசியப் பெண்கள் போதைப்பொருள் தொடர்பில் கைது

தேசியத் தினத்தை முன்னிட்டு 100 ரிங்கிட் சாரா நிதியுதவியா? நிதி அமைச்சு மறுப்பு

கற்றல் சூழல்: பள்ளிகளின் புதிய முக்கிய இலக்கு என கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக் அறிவிப்பு

பசுமை கோலாலம்பூர்: மேலும் 9 திறந்தவெளி இடங்கள் அரசாங்கத்தால் அரசிதழில் பதிவு


