Oct 15, 2026
Thisaigal NewsYouTube

நபர் தாக்கப்பட்ட சம்பவம்: நால்வர் கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:

காஜாங், ஜன.16-


கடந்த ஆண்டு டிசம்பர் 29 ஆம் தேதி காஜாங், செமினியில் நபர் ஒருவர், கண்மூடித்தனமாக தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நான்கு ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்த தாக்குதல் சம்பவம் குறித்து புதன்கிழமை காலை 10.30 மணியளவில் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட காணொளி ஒன்றின் வாயிலாக எஞ்சிய இரண்டு நபர்கள் அடையாளம் காணப்பட்டதாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நஸ்ரோன் அப்துல் அஸிஸ் தெரிவித்தார்.

கடந்த ஜனவரி 8ஆம் தேதி மற்றும் 12 ஆம் தேதி இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்ட வேளையில் எஞ்சிய இரண்டு நபர்கள் நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டதாக ஏசிபி நஸ்ரோன் குறிப்பிட்டார்.

32 க்கும் 36 க்கும் இடைப்பட்ட வயதுடைய இந்த நால்வரில் மூவர், ஏற்கனவே குற்றப்பதிவுகளை கொண்டு இருப்பதாக அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →