Jun 28, 2026
Thisaigal NewsYouTube
நிபந்தனைகளுடன் ஹம்ஸா மீண்டும் அம்னோவில் இணையலாம்: புவாட் ஜார்காஷி கூறுகிறார்
தற்போதைய செய்திகள்

நிபந்தனைகளுடன் ஹம்ஸா மீண்டும் அம்னோவில் இணையலாம்: புவாட் ஜார்காஷி கூறுகிறார்

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.16-

பெர்சத்து கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அதன் முன்னாள் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ ஹம்ஸா ஸைனுடின் புதிய அரசியல் கட்சியைத் தொடங்க வேண்டாம் என்றும், அதற்குப் பதிலாக அவர் மீண்டும் அம்னோவில் இணைவதே சிறந்தது என்றும் அம்னோ உச்சமன்ற உறுப்பினர் டத்தொ டாக்டர் முஹமட் புவாட் ஜார்காஸி தெரிவித்துள்ளார்.

இருப்பினும், ஹம்ஸா மீண்டும் அம்னோவில் இணைவது சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹம்ஸா புதிய கட்சியைத் தொடங்க மாட்டார் என்று நம்புகிறேன். அவர் அம்னோவில் இணைவதே நல்லது. அவருக்கு ஏற்கனவே அம்னோவின் செயல்பாடுகள் நன்கு பரிச்சயமானவை என்று ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் புவாட் தெரிவித்தார்.

ஹம்ஸா மீண்டும் வர விரும்பினால் அவர் சில நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட வேண்டும். அவருக்கு என்று தனிப்பட்ட சலுகைகள் எதுவும் வழங்கப்படாது என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார்.

Related News