தாவாவ், ஆகஸ்ட்.13-
திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு வீடு திரும்பிய மாதுவும், அவரின் 9 வயது மகனும் வாந்தி, வயிற்றுப் போக்கிற்கு ஆளாகி மரணமுற்றனர்.
அவ்விருவரும் திருமண விருந்து நிகழ்வில் விஷத்தன்மையிலான உணவை உட்கொண்டு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இந்தச் சம்பவம் கடந்த சனிக்கிழமை தாவாவில் நிகழ்ந்தது. இதில் 36 வயது நாஸுவா பிலி மற்றும் அவரின் ஒன்பது வயது மூத்த மகன் முகமட் அம்ரான் மரணமுற்றதாக அடையாளம் கூறப்பட்டுள்ளது.








