Oct 17, 2026
Thisaigal NewsYouTube

சக பணியாளருக்கு காயம் விளைவித்தார் : பயிற்சி அதிகாரி மீது குற்றச்சாட்டு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சக பணியாளருக்கு காயம் விளைவித்தார் : பயிற்சி அதிகாரி மீது குற்றச்சாட்டு

கோலாலபூர், நவ.8-


மலேசிய தேசிய தற்காப்புப் பல்கலைக்கழகத்தில் தன்னுடன் பயிலும் சக பயிற்சி அதிகாரியை ஸ்தீரி பெட்டியால் சூடு வைத்து காயப்படுத்தியதாக அந்த தற்காப்பு உயர்க்கல்விக் கூடத்தின் பயிற்சி அதிகாரி ஒருவர் கோலாலம்பூர், செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

22 வயது அமிருல் இஸ்கண்டார் நோர் ஹனிஸான் என்ற அந்த கேடட் பயிற்சி அதிகாரி கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி இரவு 11.45 மணியளவில் அந்தப் பல்கலைக்கழகத்தின் தங்கும் விடுதியில் 20 வயது முகமட் சால்மன் சைபுட் சுராஸ் என்ற பயிற்சி அதிகாரிக்கு இக்கொடுமையை இழைத்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 10 ஆண்டு சிறை, அபராதம் மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் அந்த பயிற்சி அதிகாரி மீது இக்குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →