May 21, 2026
Thisaigal NewsYouTube
Bas.My இலவசப் பயணம்: படிவம் 6 மாணவர்கள் மற்றும் பயிற்சிப் பள்ளி மாணவர்களுக்கும் விரிவாக்கம்
தற்போதைய செய்திகள்

Bas.My இலவசப் பயணம்: படிவம் 6 மாணவர்கள் மற்றும் பயிற்சிப் பள்ளி மாணவர்களுக்கும் விரிவாக்கம்

Share:

Bas.My இலவசப் பேருந்து பயணச் சலுகை இனி படிவம் 6 மாணவர்கள் மற்றும் அரசு பயிற்சி மையங்களின் மாணவர்களுக்கும் விரிவாக்கப்படுவதாகப் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் அறிவித்துள்ளார்.

முன்னதாக 7 முதல் 17 வயது வரையிலான பள்ளி மாணவர்கள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த இந்த வரம்பற்ற இலவசப் பயணம், இப்போது உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கும் பயனளிக்கும். குறிப்பாக கூச்சிங் மற்றும் சமரஹான் பகுதிகளில் உள்ள சுமார் 5,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இதன் மூலம் நேரடியாகப் பயனடைவர்.

பொருளாதாரச் சூழல் மாறினாலும் Bas.My கட்டணங்கள் உயராது என உறுதியளித்த அமைச்சர், மாதாந்திர வரம்பற்ற பயண அட்டையின் விலை RM50-லிருந்து RM30-ஆகக் குறைக்கப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டினார். இத்திட்டம் மக்களின் பயணச் செலவைக் குறைப்பதோடு, பொதுப் போக்குவரத்து பயன்பாட்டையும் ஊக்குவிக்கும் என அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

Related News