Jun 29, 2026
Thisaigal NewsYouTube
வலுவான ரிங்கிட் மற்றும் சீர்திருத்தங்கள்: ஒற்றுமை அரசாங்கத்தின் நிலைத்தன்மைக்குச் சான்று - ஃபாமி ஃபாட்சீல்
தற்போதைய செய்திகள்

வலுவான ரிங்கிட் மற்றும் சீர்திருத்தங்கள்: ஒற்றுமை அரசாங்கத்தின் நிலைத்தன்மைக்குச் சான்று - ஃபாமி ஃபாட்சீல்

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.23-

வலுவடைந்து வரும் மலேசிய ரிங்கிட் மற்றும் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள முக்கிய அரசியலமைப்புத் திருத்தங்கள், பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தின் நிலைத்தன்மையையும், சீர்திருத்தப் போக்கையும் பிரதிபலிக்கின்றன என்று தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் தெரிவித்துள்ளார்.

கோலாலம்பூர், பங்சார், ஜாலான் தெலாவியில் உள்ள ரமலான் சந்தையில் 200 நோன்பு திறப்புப் பொதிகளை விநியோகித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டத்தோ ஃபாமி, அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட் 3.88 என்ற அளவிலும், சிங்கப்பூர் டாலருக்கு எதிராக 3.07 என்ற அளவிலும் ஒரு கட்டத்தில் வலுவடைந்துள்ளது. இது நாட்டின் பொருளாதாரம் சரியான பாதையில் இருப்பதற்கான அறிகுறியாகும் என்றார்.

பிரதமரின் பதவிக் காலத்தை 10 ஆண்டுகளாகக் கட்டுப்படுத்துவது மற்றும் அரசு தலைமை வழக்கறிஞர் - அரசு வழக்கறிஞர் ஆகியோரின் அதிகாரங்களைப் பிரிப்பது ஆகிய இரண்டு முக்கிய அரசியலமைப்புத் திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இந்த அதிகாரப் பிரிவுக்காக கடந்த 10 முதல் 15 ஆண்டுகளாகக் காத்திருந்தோம். தற்போது மடானி அரசாங்கத்தின் கீழ் இது சாத்தியமாகியுள்ளது என்று டத்தோ ஃபாமி குறிப்பிட்டார்.

Related News

ஜோகூர் மாநிலத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளிலிருந்து 7 புகார்கள் – 3 வழக்குகள் பதிவு

ஜோகூர் மாநிலத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளிலிருந்து 7 புகார்கள் – 3 வழக்குகள் பதிவு

சரவாக் சட்டமன்றத்தில் புதிய 17 தொகுதிகள்: நாடாளுமன்ற ஒப்புதலில் தாமதம் என ஜிபிஎஸ் தலைவர் விமர்சனம்

சரவாக் சட்டமன்றத்தில் புதிய 17 தொகுதிகள்: நாடாளுமன்ற ஒப்புதலில் தாமதம் என ஜிபிஎஸ் தலைவர் விமர்சனம்

தும்பாட்டில் அரிய வகை சிவப்புக் கழுகு உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் பறிமுதல்

தும்பாட்டில் அரிய வகை சிவப்புக் கழுகு உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் பறிமுதல்

காஜாங்கில் பயங்கரம்: பயணப் பெட்டிக்குள் பெண்ணின் சடலம் மீட்பு

காஜாங்கில் பயங்கரம்: பயணப் பெட்டிக்குள் பெண்ணின் சடலம் மீட்பு

ஷா ஆலமில் போலி விசா தயாரிக்கும் கும்பல் கைது - மூளையாக செயல்பட்ட இந்தியப் பிரஜை சிக்கினார்

ஷா ஆலமில் போலி விசா தயாரிக்கும் கும்பல் கைது - மூளையாக செயல்பட்ட இந்தியப் பிரஜை சிக்கினார்

பகடிவதை செய்ததாக 6 மாணவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் உடனடி நீக்கம் - மாரா தலைவர் உத்தரவு

பகடிவதை செய்ததாக 6 மாணவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் உடனடி நீக்கம் - மாரா தலைவர் உத்தரவு