Oct 15, 2026
Thisaigal NewsYouTube

கோழி விலை கிலோவிற்கு 16.50 ரிங்கிட்டா?

திசைகள் செய்திப்பிரிவு
Share:

கோத்தாகினபாலு, ஜன. 18-


சபாவில் கோழி விலை கிலோவிற்கு 16 ரிங்கிட் 50 காசு வரை விலை உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுவதை உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு மறுத்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியுள்ள அந்த குற்றச்சாட்டில் அடிப்படையில்லை என்று அதன் துணை அமைச்சர் புஸியா சல்லே தெரிவித்தார்.

இது தொடர்பாக சபாவில் 142 வர்த்தகத் தலங்களில் அமைச்சின் அமலாக்க அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் அந்த கூடிய பட்ச விலையை காண முடியவில்லை என்று துணை அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →