Dec 5, 2025
Thisaigal NewsYouTube
5 போலீஸ்காரர்களுக்கு எதிராக விசாரணை அறிக்கை
தற்போதைய செய்திகள்

5 போலீஸ்காரர்களுக்கு எதிராக விசாரணை அறிக்கை

Share:

பெட்டாலிங் ஜெயா, ஜூலை.20-

அண்மையில் பெட்டாலிங் ஜெயாவில் SS2இல் தைவான் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரை மிரட்டிப் பணம் பறித்ததாகக் கூறப்படும் 5 போலீஸ்காரர்களுக்கு எதிராக விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளது .

அந்த ஐவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் அதே வேளையில் அந்த ஐவரையும் விசாரணைக்காகத் தடுத்து வைப்பதற்கு போலீசார் செய்து கொண்ட விண்ணப்பத்தை நீதிமன்றம் நிராகரித்து இருப்பதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஷாருல்நிஸாம் ஜாஃபார் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தற்போது குற்றவியல் சட்டம் 384 ஆவது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விசாரணை நடைபெறும் வரையில் ஐவருக்கும் பணித்தன்மை மாற்றப்பட்டு இருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

கடந்த ஜுலை 7 ஆம் தேதி பெட்டாலிங் ஜெயா, SS2இல் சாலைத் தடுப்புச் சோதனையை மேற்கொண்ட போது, தன்னை கைது செய்த போலீஸ்காரர்கள், மிரட்டிப் பணம் பறித்ததாக அந்த தைவான் நாட்டுப் பெண், சமூக வலைத்தளத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

Related News