Sep 12, 2026
Thisaigal NewsYouTube
சுங்கை ஜோகூர் பாலத்தில் மோதிய சரக்குக் கப்பல்
தற்போதைய செய்திகள்

சுங்கை ஜோகூர் பாலத்தில் மோதிய சரக்குக் கப்பல்

Share:

ஜோகூர், கோத்தா திங்கி, செனாய்-தேசாரு விரைவுச்சாலையில் உள்ள சுங்கை ஜோகூர் பாலத்தின் மீது சரக்குக் கப்பல் ஒன்று மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மலேசியக் கொடியுடன் பயணித்த எண்ணெய் தயாரிப்புகளை ஏற்றிச் சென்ற டேங்கர் கப்பல், இன்று பிற்பகல் 2.35 மணியளவில், பெனாவார்-பாசிர் கூடாங் பகுதிக்கு இடையிலான 48.9- ஆவது கிலோ மீட்டர், மேற்குத் திசை வழித்தடத்தில் பயணித்தபோது பாலத்தில் மோதியதாக நம்பப்படுகிறது.

அதிர்ஷ்டவசமாக, இந்தச் சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை.

இதனிடையே, கப்பல் மோதிய போதிலும் பாலத்தின் கட்டமைப்பு உறுதியாக இருப்பதாகவும், பெரிய அளவில் சேதம் அல்லது குறைபாடு எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோதலுக்குப் பின்னர் அந்தக் கப்பல் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் செனாய்-தேசாரு விரைவுச்சாலை நிர்வாகம் விரைவில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது

Related News

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு?  2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு? 2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

மலேசியாவில் கடந்த 7 மாதங்களில் 4,646 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு - துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் தகவல்

மலேசியாவில் கடந்த 7 மாதங்களில் 4,646 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு - துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் தகவல்