Sep 15, 2026
Thisaigal NewsYouTube
ஆற்றில் விழுந்த தொழிலாளரைத் தேடும் பணி தீவிரம்
தற்போதைய செய்திகள்

ஆற்றில் விழுந்த தொழிலாளரைத் தேடும் பணி தீவிரம்

Share:

கோலாலம்பூர், ஜாலான் ஈப்போ, ஒன்றாவது மைல், சுங்கை கோம்பாக்கில் ஆற்றில் தவறி விழுந்ததாக நம்பப்படும் தொழிலாளர் ஒருவரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இன்று பிற்பகல் சுமார் 2.30 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

ஆற்றோரத்தில் மண்வாரி இயந்திரத்தின் உதவியுடன் பராமரிப்புப் பணியில் இரு தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபோது, அவர்களில் ஒருவர் எதிர்பாராதவிதமாக ஆற்றில் தவறி விழுந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

ஆற்றில் விழுந்த அந்தத் தொழிலாளர் நீரின் சுழற்சியில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் உடனடியாக போலீசாருக்குத் தகவல் அளித்துள்ளனர்.

இதையடுத்து, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர், பொது தற்காப்புப் படையினரின் உதவியுடன், ஆற்றில் இறங்கி காணாமல் போன தொழிலாளரைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

அவரது நிலை குறித்து இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

Related News

யோங் பெங் அருகே தீப்பிடித்த சுற்றுலா பேருந்து – 15 பேர் உயிர் தப்பினர்

யோங் பெங் அருகே தீப்பிடித்த சுற்றுலா பேருந்து – 15 பேர் உயிர் தப்பினர்

16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மைத்துனருக்கு 9 ஆண்டுகள் சிறை

16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மைத்துனருக்கு 9 ஆண்டுகள் சிறை

மஞ்சோங்கில் 3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சட்டவிரோதப் பொருட்கள் போலீசாரால் அழிக்கப்பட்டன

மஞ்சோங்கில் 3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சட்டவிரோதப் பொருட்கள் போலீசாரால் அழிக்கப்பட்டன

ஜாகிர் நாயக் விவகாரத்தில் இந்தியாவுடன் அரசியல் உடன்பாடா? – அன்வார் அரசுக்கு பாஸ் கட்சி கேள்வி

ஜாகிர் நாயக் விவகாரத்தில் இந்தியாவுடன் அரசியல் உடன்பாடா? – அன்வார் அரசுக்கு பாஸ் கட்சி கேள்வி

நாடு கடத்துவது குறித்து இந்தியாவுடன் அன்வார் பேச்சுவார்த்தை: கவலைப்படப் போவதில்லை என ஜாகிர் நாயக் அறிவிப்பு

நாடு கடத்துவது குறித்து இந்தியாவுடன் அன்வார் பேச்சுவார்த்தை: கவலைப்படப் போவதில்லை என ஜாகிர் நாயக் அறிவிப்பு

ஈப்போவில் பெண் ஊழியரிடம் பாலியல் அத்துமீறல் – இளைஞர் மீது 2 குற்றச்சாட்டுகள்

ஈப்போவில் பெண் ஊழியரிடம் பாலியல் அத்துமீறல் – இளைஞர் மீது 2 குற்றச்சாட்டுகள்