Jul 31, 2026
Thisaigal NewsYouTube
கோபெங் – குவாலா கங்சார் துரிதநெடுஞ்சாலைக்கு அங்கீகாரம்
தற்போதைய செய்திகள்

கோபெங் – குவாலா கங்சார் துரிதநெடுஞ்சாலைக்கு அங்கீகாரம்

Share:

பேரா மாநிலத்தில் கோபெங்கிற்கும், குவாலா கங்சார் க்கும் இடையில் துரித நெடுஞ்சாலைத் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளதாக பேரா மந்திரி பெசார் டத்தோ சாரானி முஹ்மாட் தெரிவித்துள்ளார்.
கோப்பெங்கிலிருந்து செல்கின்றவர்கள், ஈப்போவை கடந்து கோல கங்காருக்கு செல்லும் நிலை இல்லாமல் கோப்பெங்கிலிருந்து கோல கங்சாருக்கு நேரடியாக செல்லவல்ல / தூரத்தை குறைக்கக்கூடிய 60 கிலோ மீட்டர் தூரமே கொண்ட WISE எனப்படும் West Ipoh Span Expressway துரித நெடுஞ்சாலை வகை செய்யும் என்று மந்திரி பெசார் குறிப்பிட்டார்.

இந்த புதிய நெடுஞ்சாலை நிர்மாணிப்புக்கான செலவினத்தை தனியார் நிதி அளிப்பு மூலம் பெறப்படும் என்று சாரானி முஹ்மாட் விளக்கினார்.

Related News