அஜித்தின் மனைவி ஷாலினிக்கு அண்மையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், ஓய்வில் இருக்கும் அவரை மகன் ஆத்விக் அரவணைத்து முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை, ஷாலினி சமூக வலைதளத்தில் வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
கோலிவுட் திரையுலகின் வசூல் மன்னனாக இருக்கும் அஜித், தன்னை எப்போதுமே மிகவும் பிஸியாக வைத்துக் கொள்ளும் நபர் என்பது அனைவரும் அறிந்ததே. படப்பிடிப்பு இல்லாத நாட்களில் கூட பைக் ரேஸ், கார் ரேஸ், துப்பாக்கி சுடுதல், ஏரோ மாடலிங், சமையல், போட்டோ கிராஃபி, என துரு துருவென ஏதேனும் ஒரு பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வார்.

அதே போல் அஜித் தன்னுடைய குடும்பத்தின் மீதும் அலாதி பிரியம் கொண்டவர். குறிப்பாக வீட்டில் ஏதேனும் விசேஷம்,பிள்ளைகளின் பிறந்தநாள், மனைவியின் பிறந்த நாள், தன்னுடைய திருமண நாள், போன்ற சென்டிமென்ட் ஆன தினங்களில்... உலகின் எந்த மூலையில் இருந்தாலும் சென்னைக்கு வந்து விடுவார். ஒருவேளை படப்பிடிப்பு காரணமாக வரமுடியாத சூழ்நிலையில் இருந்தாலும், தன்னுடைய குடும்பத்தை அங்கு அழைத்துச் சென்று, அவர்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுத்து அந்த நாளை சிறப்பிப்பார்.

குடும்பத்தின் மீது மட்டுமின்றி, தன்னுடைய ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் ஒவ்வொருவர் மீதும் தனித்துவமான அக்கறை காட்டும் நபர் அஜித். தன்னுடைய வீட்டில் வேலை செய்பவர்களுக்கு கூட சென்னையில் சொந்தமாக வீடு கட்டிக் கொடுத்து, அவர்கள் வந்து செல்ல வாகன வசதியும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். அதே போல் தினம்தோறும் கூலி வேலை செய்பவர்களுக்கு அஜித் வீட்டில் உணவுகள் இலவசமாக வழங்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. எனவே இவரை ஒவ்வொரு நாளும் பலர் மனதார வாழ்த்திவிட்டு தான் செல்கிறார்கள்.








