Jan 19, 2026
Thisaigal NewsYouTube
ரஹ்மா கோட்பாடு மகாதீர் சிந்தனையில் உருவானது
தற்போதைய செய்திகள்

ரஹ்மா கோட்பாடு மகாதீர் சிந்தனையில் உருவானது

Share:

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அடிக்கடி உச்சரிக்கும் ரஹ்மா கோட்பாடு, முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமதுவின் சிந்தனையில் உருவானது என்று கெராக்கான் தானா ஆயர் கூட்டணியின் தகவல் பிரிவுத் துணைத் தலைவர் மட்சேர் இப்ராஹிம் தெரிவித்தார்.

ஆனால், ரஹ்மா கோட்பாடு, பிரதமர் அன்வாரின் சிந்தனையில் உருவானதைப் போல தற்போது சித்தரிக்கப்பட்டுவருவதாக மட்சேர் இப்ராஹிம் குறிப்பிட்டார். நாட்டில் இரண்டாவது முறையாக பிரதமர் பொறுப்பை ஏற்றப் பின்னர், கடந்த 2020 பிப்ரவரி 16 ஆம் தேதி, சபா, கோத்தா கினாபாலுவில் தேசிய அளவிலான அல் குர்ஹான் ஓதும் போட்டியின் போது, துன் மகாதீர் தமது உரையில் ரஹ்மா கோட்பாட்டை அறிமுகப்படுத்தியதாக மட்சேர் இப்ராஹிம் விளக்கமளித்தார்.

Related News