Aug 2, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

தொழிலாளர்களுக்கு ஆபத்து - மனித வள அமைச்சின் கூற்றை விமர்சித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்!

Share:

கட்டாயத் தொழிலாளர் விவகாரம் குறித்து மனிதவள அமைச்சு வெளியிட்ட கூற்று, , அந்த விவகாரத்தை அமைச்சு துச்சமாகக் கருதுவதைக் காட்டுகிறது என முன்னாள் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லெஸ் சந்திகோ தெரிவித்துள்ளார்.

கட்டாயத் தொழிலாளர் குறித்த பிரச்சனைகள் இருப்பதாக ஒப்புக்கொண்டுள்ள மனிதவள அமைச்சர் சிவக்குமார், ஆனால் அவை அவ்வளவு பெரிய பிரச்சனையாக இல்லை என சிவக்குமார் கூறியது, அவரின் பொறுப்பறத் தனத்தையும் தொழிலாளர்களுக்கு எவ்வளவு ஆபத்து இருப்பதை அவர் உணரவில்லை என்பதையும் காட்டுகிறது என சார்லெஸ் சந்திகோ குறிப்பிட்டார்.

சிவகுமாரின் பதில் ஆபத்தானது. கட்டாயத் தொழிலாளர் முறை நடப்பில் உள்ளது. அவர்களின் உரிமைகள், பாதுகாப்பு ஆகியவற்றுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் ஒரு பலவீனமான முறை இருப்பதை சிவக்குமாரே ஒப்புக்கொண்டுள்ளார் என சார்லெஸ் சந்திகோ சுட்டிக் காட்டினார்.

முன்னதாக, கட்டாயத் தொழிலாளர்கள் மலேசியாவில் இருக்கிறார்கள் எனவும் அது கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் சிவக்குமார் கூறி இருந்தார்.

இந்தக் கூற்றுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், யுனைட்டட் கிங்டமைச் சேர்ந்த தொழிலாளர் நல ஆர்வலர் Andrew Wallis குறிப்பிடுகயில், மலேசியாவில் நவீன யுக அடிமைத்தனம் உருவாகி இருப்பதாகச் சித்தரித்திருந்தார்,

மலேசியாவில் 212,000 கட்டாயத் தொழிலாளர்களாக இருக்கிறார்கள் எனவும் Andrew Wallis குறிப்பிட்டிருந்தார்.

Related News

அரச குடும்பத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும்  - புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் அறிவுறுத்தல்

அரச குடும்பத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும் - புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் அறிவுறுத்தல்

சுங்கை பூலோவில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: வெளிநாட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

சுங்கை பூலோவில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: வெளிநாட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

Rocky உயிரிழந்த விவகாரம்: சந்தேக நபர், சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு

Rocky உயிரிழந்த விவகாரம்: சந்தேக நபர், சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு

16 வயது இந்தியப் பெண் சாந்தினி காணாமல் போயுள்ளார்: சுங்கை பூலோ போலீஸ் தகவல்

16 வயது இந்தியப் பெண் சாந்தினி காணாமல் போயுள்ளார்: சுங்கை பூலோ போலீஸ் தகவல்

ஜார்ஜ் டவுனில் பரபரப்பு: பழுது பார்க்கும் பணியின் போது கட்டடக் கூரை இடிந்து விழுந்து விபத்து

ஜார்ஜ் டவுனில் பரபரப்பு: பழுது பார்க்கும் பணியின் போது கட்டடக் கூரை இடிந்து விழுந்து விபத்து

சுங்கை பூலோ அருகே பயங்கரம்: கன்டெய்னர் லாரி விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கிய ஓட்டுநர் மீட்பு

சுங்கை பூலோ அருகே பயங்கரம்: கன்டெய்னர் லாரி விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கிய ஓட்டுநர் மீட்பு