Dec 5, 2025
Thisaigal NewsYouTube
ஏர் ஆசியாவில் முஸ்லிம் பணிப் பெண்களுக்கு ஹிஜாப் சீருடை
தற்போதைய செய்திகள்

ஏர் ஆசியாவில் முஸ்லிம் பணிப் பெண்களுக்கு ஹிஜாப் சீருடை

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.05-

ஏர் ஆசியா விமான நிறுவனம், தனது முஸ்லிம் விமானப் பணிப் பெண்கள் விரும்பினால் முக்காடு அணியும் புதிய சீருடைக் கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது.

முன்னதாக, இந்தோனேசியாவின் ஆச்சே போன்ற சில வழித்தடங்களுக்கு மட்டுமே உள்ளூர் விதிமுறைகள் காரணமாக ஹிஜாப் எனும் முக்காடு அணிய அனுமதிக்கப்பட்டிருந்தது.

ஆனால், ஏர் ஆசியாவின் புதிய கொள்கையின்படி வரும் 2026 ஆம் ஆண்டு ரமலான் மாதத்திற்கு முன்னதாக இந்த முறை ஏர் ஆசியாவின் அனைத்து வழித்தடங்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது.

இந்த மாற்றமானது, ஊழியர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையிலும், பன்முகத்தன்மை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் வகையிலும் கொண்டு வரப்பட்டுள்ளது என்று ஏர் ஆசியா தெரிவித்துள்ளது.

Related News