சுமார் 10 கோடி வெள்ளி மதிப்பிலான 28 ஆயிரம் டன் எடைக்கொண்ட அரிசி விநியோகிப்பில் நிகழ்ந்துள்ள மிகப்பெரிய மோசடியை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM அம்பலப்படுத்தியுள்ளது.
கெடா மாநில அரசுக்கு சொந்தமான ஒரு விவசாய நிறுவனத்திடமிருந்து ஆண்டுக்கு 10 கோடி வெள்ளி மதிப்பிலான அரிசி விநியோகிப்பிற்கான குத்தகையை பெற்றுள்ள நிறுவனம் ஒன்று இந்த மோசடியை புரிந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த மோசடி வேலைக்கு கெடா அரசுக்கு சொந்தமான ஏஜென்சி ஒன்றின் வாரிய உறுப்பினர், உடந்தையாக இருந்து, 10 கோடி வெள்ளி மதிப்பிலான 28 ஆயிரம் டன் அரிசியை அனுப்பாமலேயே அதனை விநியோகித்து விட்டதைப் போல் கணக்கு காட்டப்பட்டுள்ளது.
அந்த நிறுவனத்தற்கும், கெடா அரசாங்க ஏஜென்சிக்கும் இடையில் இடையில் கொள்முதல் ஒப்பந்தம் இருப்பதைப் போல நம்பவைத்து 3 கோடி வெள்ளி பெறப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது என்று எஸ்பிஆர்எம் தெரிவித்துள்ளது.








