Dec 2, 2025
Thisaigal NewsYouTube
வெடி மருந்து வைத்த ஆடவர்கள் கைது
தற்போதைய செய்திகள்

வெடி மருந்து வைத்த ஆடவர்கள் கைது

Share:

சொகுசு அடுக்குமாடி ஒன்றின் முன் அமைந்துள்ள கடைக்கு, வெடி மருந்தை வைத்ததுடன் அதை வெடிக்க செய்த 5 ஆடவர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

பிவிசி நெகிழி குழாய் கொண்டு பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட அந்த வெடிக்குண்டை தயாரிக்க அவர்களுக்குப் பணம் வழங்கப்பட்டதாக போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக பிரிக்பீட்ஸ் வட்டார போலீஸ் தலைவர் எ.சி.பி. அமிஹிசாம் அப்துல் சுகோர் தெரிவித்தார்.

35 வயது முதல் 60 வயது மதிக்கத்தக்க அந்த ஐவரும் வெடி மருந்தை கடையில் வைத்த நிழல் காட்சி ரகசிய கேமராவில பதிவு செய்யப்பட்டுள்ளதால் அதனை உறுதிப்படுத்துவதற்காக அவர்கள் போலீஸ் காவலில் வைக்கப்படுவர் என அப்துல் சுகோர் கூறினார்.

காலை 6.00 மணியளவில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக அங்குள்ள பாதுகாவலர் போலீசாருக்குத் தகவல் தந்ததாகவும், இது தொடர்பாக தீயணைப்பு குழுவினர் நடத்திய விசாரணையில் அங்கு வெடித்த சம்பவம் நடந்த அடையாளங்கள் இருப்பதாக உறுதி செய்துள்ளனர்.

Related News