குளுவாங், டிசம்பர்.15-
ஜோகூர் மற்றும் சிம்பாங் ரெங்கம் ஆகிய பகுதிகளில் போலீசார் தொடங்கிய ஓப் மாபோக் எனும் மதுபோதையில் வாகனத்தைச் செலுத்தும் வாகனமோட்டிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட சோதனையில் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்தச் சோதனை கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி, நேற்று ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெற்றது. குளுவாங் மாவட்ட போக்குவரத்து போலீஸ் தலைமையகத்தினால் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.
இதில் உள்ளூரைச் சேர்ந்த 22 க்கும் 50 க்கும் இடைப்பட்ட வயதுடைய ஆறு பேர் கைது செய்யப்பட்டதாக குளுவாங் மாவட்ட போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் ஏசிபி பாஹ்ரேன் முகமட் நோ தெரிவித்தார்.








