சர்ச்சைக்குரிய 1MDB பணத்தை பயன்படுத்தி, தமது முன்னாள் காதலனான Goldman Sachs முதலீட்டு வங்கியின் நிர்வாக இயக்குநர் Tim Leissner ரால் லண்டனில் வாங்கி கொடுக்கப்பட்ட 4 கோடியே 43 லட்சம் வெள்ளி ஆடம்பர வீடு தொடர்பில் அந்த சட்டவிரோதப் பணத்தை ஆஸ்ட்ரோவின் முன்னாள் பெண் தலைமை செயல்முறை அதிகாரி Datuk Rohana Rozhan, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் திருப்பிக் கொடுத்து விட்டார்.
ஒரு ஜெர்மனியரான Tim Leissner ருடன் உல்லாச வாழ்க்கையில் திளைத்து இருந்ததாக கூற ப்படும் ஆஸ்ட்ரோவின் அந்த முன்னாள் பெண் அதிகாரிக்கு. 1MDB பணத்தை பயன்படுத்தி, லண்டனில் ஆடம்பர வீட்டை வாங்கி கொடுத்ததை அந்த வங்கி அதிகாரி, அமெரிக்காவில் நடைபெற்ற 1MDB உழல் வழக்கில் பகிரங்கமாக ஒப்புக்கொண்டார்.
இதன் தொடர்பில் அஸ்ட்ரோவின் Datuk Rohana Rozhan, ஊழல் தடுப்பு ஆணையத்தின் பிடியில் சிக்கிய வேளையில் அந்தப் பணத்தை அவர் திரும்ப ஒப்படைத்து விட்டதாக இன்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.








