Dec 4, 2025
Thisaigal NewsYouTube
பேரங்காடி மையத்தில் பிளாஸ்டிக் அரிசியா? முழு விசாரணை
தற்போதைய செய்திகள்

பேரங்காடி மையத்தில் பிளாஸ்டிக் அரிசியா? முழு விசாரணை

Share:

சபா, சண்டக்கானில் உள்ள ஒரு பேரங்காடி மையத்தில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து முழுமையாக விசாரணை செய்யப்பட்டு வருவதாக உள்நாட்டு வாணிபம், வாழ்க்கைச் செலவின இடைக்கால அமைச்சர் டத்தோ அர்மிசான் முகமட் அலி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சின் அமலாக்கத் தரப்பு விரிவாக விசாரணை செய்து வருவதாக அவர் குறிப்பிட்டார். அந்த பேரங்காடி மையத்தில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுவதாக வாடிக்கையாளர் ஒருவர் குற்றஞ்சாட்டியிருப்பதுடன் அது உண்மை என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு நிமிடம் 20 விநாடிகள் ஓடக்கூடிய காணொளி ஒன்றையும் வெளியிட்டுள்ளார் என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அந்த வாடிக்கையாளரின் குற்றச்சாட்டு எந்த அளவிற்கு உண்மை என்பதை உறுதி செய்ய இவ்விவகாரம் தற்போது முழு வீச்சில் ஆராயப்பட்டு வருவதாக அர்மிசான் முகமட் அலி தெரிவித்தார்.

Related News