கோலாலம்பூர், நவ. 2, 2023 மூன்றாம் காலாண்டில் கார்ல்ஸ்பர்க் மலேசிய நிறிவனத்தில் வருமானம் கடந்த 2022இன் மூன்றாம் காலாண்டைக் காட்டிலும் 10.2 விழுக்காடு குறைந்து 513.4 மில்லியன் வெள்ளியாகப் பதிவு செய்துள்ளது. அதே சமயம், அதன் இலாபமும் 0.6 விழுக்காடு குறைந்து 75.9 மில்லியன் வெள்ளியாகப் பதிவு செய்துள்ளது என அந்நிறுவனம் தகவல் வெலியிட்டுள்ளது.
அதே காலக் கட்டத்தில், இந்நிறுவனத்தின் பங்கு ஒன்றுக்கான வருவாய் 24.84 காசாக இருந்தது. கடந்த ஆண்டு பங்கு ஒன்றுக்கான வருவாய் 24.98 ஆகப் பதிவு செய்திருந்தது.
Q2023 மூன்றாம் காலாண்டுக்கு ஒரு பங்குக்கு 19 சென் என்ற இடைக்கால ஈவுத்தொகையை அறிவிப்பதில் இந்நிறுவனத்தின் இயக்குநர்கள் வாரியக்குழு மகிழ்ச்சியடைகிறது. ஒன்பது மாதங்களுக்கு மொத்த இடைக்கால ஈவுத்தொகையாக ஒரு பங்கிற்கு 62 சென் ஆகும்.
இவ்வாண்டு சனவரி 1 தொடங்கி செப்டம்பர் 30 வரை மொத்தமாக 9 மாதங்களுக்கு கார்ல்ஸ்பர்க் மலேசியாவின் மொத்த வருவாய் 6.6% குறைந்து 1.68 பில்லியன் வெள்ளியாகப் பதிவு செய்துள்ளது. ஆ=அதே நேரத்தில் அதன் ஐலாபமும் கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடும்போது 3.0% குறைந்து 249.2 மில்லியன் வெள்ளியாகப் பதிவு செய்துள்ளது.
மலேசியா, சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகளிலும் ஒரு வருடத்திற்கு முன்பு ஓமிக்ரானுக்குப் பிந்தைய காலக்கட்டத்தில் வாடிக்கையாளர்கள் குறைந்திருந்ததால் இந்தச் சரிவு ஏற்பட்டுள்ளது என அந்நிறுவனம் குறிப்பிட்டது.
சரிந்து வரும் வாடிக்கையாளர் எண்ணிக்கையால் தங்கள் நிறுவனத்தின் காலாண்டு வருமானத்திலும் இலாபத்திலும் பாதிப்பை உண்டாக்கியுள்ளது எனவும். உயர்ந்த வட்டி விகிதங்கள், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகள், குறிப்பாக உலகப் பொருளாதாரத்தின் நிச்சயமற்ற தன்மையின் காரணத்தால் அதிகரித்து வரும் உணவு விலை, பயனீட்டாளர் செலவினங்களில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக கார்ல்ஸ்பர்க் மலேசியாவின் நிர்வாக இயக்குநர் ஸ்டெபனோ கிளினி குறிப்பிட்டார்.
மதிப்புமிக்க தி எட்ஜ் பில்லியன் ரிங்கிட் கிளப்பின் 14வது பதிப்பில் நுகர்வோர் தயாரிப்புகள், சேவைகள் பிரிவில் மூன்று ஆண்டுகளில் அதிக இலாப ஈவு ஈட்டி ண்டும் முதலிடத்தைப் பிடித்திருக்கும் கார்ல்ஸ்பெர்க் பிரூவரி மலேசியா பெர்ஹாட் நிறுவனம், 2022ஆம் ஆண்டறிக்கையின்படி இதன் பங்குதாரர்கள் இலாப ஈவாக கடந்த ஆண்டில் 181.1%ஆகவும் 2021இல் 107.9%ஆகவும் 2020 இல் 105.1% ஆகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெருமை மிக்கத் தருணமாக உணர்வதாக ஸ்டெபனோ கிளினி தெரிவித்தார்.
கார்ல்ஸ்பெர்க் நிறுவனம் அதன் வருவாய் மேலாண்மையிலும் செலவுகளை நிர்வகிப்பதிலும் அதிக கவனம் செலுத்தி விழிப்புடன் இருக்கும் அதே வேளையில், தங்களின் புகழ்பெற்ற பிராண்டுகளில் தொடர்ந்து முதலீடு செய்து மேம்படுத்தும் எனவும் அவர் மேலும் கூறினார்.
2024 ஆம் ஆண்டு முதல் மலேசியாவில் சப்போரோ பிரீமியம் பீர் பிரத்தியேக உற்பத்தி, விநியோகிப்பு ஆகியவற்றுக்காக சப்போரோ ப்ரூவரீஸ் லிமிடெட் உடன நவம்பர் 1 ஆம் நாள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது கார்ல்ஸ்பெர்க் நிறுவனம்.
இதேபோல், சிங்கப்பூரில் சப்போரோ பிரீமியம் பீர் மற்றும் யேபிசு இரண்டையும் விநியோகிக்கக் கூட்டு விநியோக உரிமைகளையும் பெற்றுள்ளது. "ஜப்பானில் முன்னோடி பிரீமியம் பீர் பிராண்டுடன் எங்கள் கூட்டு முயற்சியை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். சப்போரோ, அதன் செழுமையான வரலாறும் உயர் தரமும், எங்கள் SAIL'27 பிரீமியமயமாக்கல் உத்தியுடன் முழுமையாக ஒத்துப்போகிறது.
இஃது ஓர் அற்புதமான பயணத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது, ஏனெனில் நீண்ட காலத்திற்கு பிராண்டை உருவாக்க முயல்கிறோம். மேலும் அடுத்த ஆண்டு வெற்றிகரமான தொடக்கத்தை எதிர்பார்க்கிறோம். அசஹி நிறுவனத்தின் ஒப்பந்த புதுப்பிக்கப்படாததால் ஏரத்தாழ 30 மில்லியன் வெள்ளி அடுத்த ஆண்டு வருமானத்தில் சரிவைக் கொண்டு வரகாம் ஆனால், அதற்குப் பதிலாக சப்போரோவின் அறிமுகம் மூலம் இஃது ஈடு செய்யும் என நம்பிக்கை இருக்கிறது" என்றார் கிளினி.
ஆண்டு இறுதி கொண்டாட்டத்தை முன்னிட்டு, 750ml பாட்டிலில் பேக் செய்யப்பட்ட 1664 PRESTIGE என்ற சிறப்புப் பதிப்பை மலேசியாவிலும் சிங்கப்பூரில் அறிமுகப்படுத்தவுள்ளது. சர்வதேச ஸ்டவுட் மாதத்தை முன்னிட்டு மலேசியாவில் கானரின் ஸ்டவுட் போர்ட்டர் கட்டாய நுகர்வோர் விளம்பரங்களுடன் கொண்டாடுகிறத. REXKL உடன் அதன் தொடக்க பிராண்ட் இசை விழாவையும் நடத்துகிறது என கார்ல்ஸ்பெர்க் தெரிவித்துள்ளது.









