நேற்று இரவு 7.20 மணி அளவில் ஏற்பட்ட தீ சம்பவத்தால் 17 குடும்பங்கள் வீடுகளை இழந்துள்ளன. கோத்தா கினபாலுவின் லிகாஸ் புறநகர பகுதியில் அமைந்துள்ள 15 பலகை வீடுகளும் தீயில் முற்றாக அழிந்து விட்டதாக லிந்தாஸ் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையத்தின் தலைவர் அகஸ்தாவியா ஜோ குவாஸ் தெரிவித்தார்.
தீயில் கருகிய அந்த வீடுகள் மிக சிறிய அளவு கொண்டதாகவும் அவை பலகையினால் அமைக்கப்பட்ட தொடர் வீடுகளாக இருந்ததால் தீயை கட்டுப்படுத்த 1 மணி 30 நிமிடம் எடுத்துக் கொண்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
48 தீயணைப்பு வீரர்கள் கொண்ட குழுவினர் சம்பவம் நடந்த இடத்தில் தீ முற்றாக அணைந்து விட்டதை உறுதி செய்துக் கொண்டனர் என்றும் இந்த தீ சம்பவத்தால் உயிர் இழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும் அவர் தெளிவுப்படுத்தினார்.








