Oct 16, 2026
Thisaigal NewsYouTube

கொள்ளைச் சம்பவம் : ஒருவன் இறந்து கிடந்தான்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கொள்ளைச் சம்பவம் : ஒருவன் இறந்து கிடந்தான்

குளுவாங், நவ.16-


ஜோகூர், குளுவாங், ஜாலான் லக்சமணா, சன்ரைஸ் பார்க்கில் ஒரு வீட்டில் நிகழ்ந்த கொள்ளைச் சம்பவத்தின் போது, கொள்ளையர்களில் ஒருவன் கடும் காயங்களுடன் இறந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்த இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள வேளையில் ஒருவன், இன்னமும் தலைமறைவாக உள்ளான் என்று குளுவாங் மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் நிக் முகமட் அஸ்மி ஹுசேன் தெரிவித்தார்.

இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் உள்ளூர் வாசி நேற்று இரவு 7.12 மணியளவில் போலீசுக்கு தகவல் அளித்துள்ளார். இறந்து கிடந்த நபருக்கு வலது கரத்தில் ஏற்பட்ட கடும் காயத்தினால் தப்பிக்க இயலாமல், உடலிருந்து அதிகமான ரத்தம் வெளியேறியிருக்கலாம் என்று நம்பப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

இரும்பினால் அல்லது கூர்மையான ஆயுத்தினால் அந்த நபருக்கு காயம் உண்டு பண்ணியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் கூறினார்

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →