Mar 28, 2026
Thisaigal NewsYouTube
கிழக்கு மலேசியாவிலும் இலக்கு வைக்கப்பட்ட டீசல் மானியம்: அமைச்சர் அமீசான் முகமது அலி விளக்கம்
தற்போதைய செய்திகள்

கிழக்கு மலேசியாவிலும் இலக்கு வைக்கப்பட்ட டீசல் மானியம்: அமைச்சர் அமீசான் முகமது அலி விளக்கம்

Share:

சபா, சரவாக் மற்றும் லாபுவான் ஆகிய பகுதிகளில் இலக்கு வைக்கப்பட்ட டீசல் மானியத்தை அமல்படுத்துவதற்கான கட்டமைப்பை நிதி அமைச்சு தற்போது ஆய்வு செய்து வருவதாக உள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் அமீசான் முகமது அலி தெரிவித்துள்ளார்.

இந்த புதிய முறைமை குறித்து மாநில அரசாங்கங்களுடன் ஆலோசிக்கப்பட்ட பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும். கடத்தல் மற்றும் முறைகேடுகளைத் தவிர்க்கவே 'இலக்கு வைக்கப்பட்ட மானியம்' கொண்டுவரப்படுகிறது என்று அமைச்சர் விளக்கினார்.

தற்போது கிழக்கு மலேசியாவில் டீசல் விலை லிட்டருக்கு 2 ரிங்கிட் 15 சென்னாக நீடிக்கிறது. இது தீபகற்ப மலேசியாவின் விலையான 5 ரிங்கிட் 52 சென்னுடன் ஒப்பிடுகையில் பாதியளவு குறைவாகும்.

'BUDI95' திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானிய விலை RON95 பெட்ரோலுக்கான மாதாந்திர ஒதுக்கீடு, மத்திய கிழக்கு பதற்றத்தை கருத்தில் கொண்டு தற்காலிகமாக 300 லிட்டரிலிருந்து 200 லிட்டராகக் குறைக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு சுமை ஏற்படாத வகையில், அதே சமயம் கசிவுகளைத் தடுக்கும் வகையிலும் இந்தச் சீர்திருத்தங்கள் படிப்படியாக அமல்படுத்தப்படும் என அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

Related News

ஹார்முஸ் நீரிணையில் சிக்கிய 7 மலேசியக் கப்பல்கள் விரைவில் விடுவிப்பு: அமைச்சர் முகமட் ஹசான் தகவல்

ஹார்முஸ் நீரிணையில் சிக்கிய 7 மலேசியக் கப்பல்கள் விரைவில் விடுவிப்பு: அமைச்சர் முகமட் ஹசான் தகவல்

நாட்டில் கடும் வெப்ப அலை: பெர்லிஸ், கெடா, பேராக் மாநிலங்களுக்கு ' நிலை 2' எச்சரிக்கை

நாட்டில் கடும் வெப்ப அலை: பெர்லிஸ், கெடா, பேராக் மாநிலங்களுக்கு ' நிலை 2' எச்சரிக்கை

மலையுச்சியில் மலர்ந்த காதல்: நடிகை பெல்லா அஸ்டில்லா - சையத் சாதிக் கைகோர்த்தனர்

மலையுச்சியில் மலர்ந்த காதல்: நடிகை பெல்லா அஸ்டில்லா - சையத் சாதிக் கைகோர்த்தனர்

அடுப்பு தேவையில்லை... வெயிலே போதும்! கெடாவில் வைரலாகும் 'சூரிய வெப்ப சமையல்

அடுப்பு தேவையில்லை... வெயிலே போதும்! கெடாவில் வைரலாகும் 'சூரிய வெப்ப சமையல்

ஹவுஸ்மென்ஷிப் சேர்க்கை குறைவு: ஒப்பந்த முறையை தொடர்வது குறித்து அரசு முடிவு செய்ய வேண்டும் – டாக்டர் சுப்ரமணியம்

ஹவுஸ்மென்ஷிப் சேர்க்கை குறைவு: ஒப்பந்த முறையை தொடர்வது குறித்து அரசு முடிவு செய்ய வேண்டும் – டாக்டர் சுப்ரமணியம்

போலி மருத்துவச் சான்றிதழ்கள் விற்பனை தொடர்ச்சி: 33 வழக்குகள் பதிவு

போலி மருத்துவச் சான்றிதழ்கள் விற்பனை தொடர்ச்சி: 33 வழக்குகள் பதிவு