Oct 17, 2026
Thisaigal NewsYouTube

எச்.ஆர்.டி. கோர்ப் மீண்டும் விசாரணைக்கு அழைப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
எச்.ஆர்.டி. கோர்ப் மீண்டும் விசாரணைக்கு அழைப்பு

கோலாலம்பூர், நவ.6-


மனித அமைச்சின் கீழ் உள்ள மனித வள மேம்பாட்டு வாரியமான எச்.ஆர்.டி. கோர்ப்-- பை விசாரணைக்காக தேசிய கணக்காய்வுக்குழுவான பி.ஏ.சி. மீண்டும் அழைத்துள்ளது.

இதற்கு முன்பு பி.ஏ.சி. முன்மொழிந்த பரிந்துரைகளின் தொடர் நடவடிக்கை குறித்து விளக்கம் பெறுவதற்கு மனித வள மேம்பாட்டு வாரியம் அழைக்கப்பட்டுள்ளதாக அந்தக்குழுவின் தலைவர் டத்தோ மாஸ் எர்மியாத்தி சம்சுடீன் தெரிவித்துள்ளார்.

எச்.ஆர்.டி. கோர்ப்-வுடனான பி.ஏ.சி. யின் தொடர்நடவடிக்கைகள் இன்னும் முடிவடையவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் வரும் நவம்பர் 20 ஆம் தேதி எச்.ஆர்.டி. கோர்ப் பொறுப்பாளர்கள் அழைக்கப்படுவர் என்று அவர் தெளிவுபடுத்தினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →