Mar 23, 2026
Thisaigal NewsYouTube
லஞ்சம் தொடர்பில் மேலும் ஓர் உதவி தலைமை இயக்குநர் கைது
தற்போதைய செய்திகள்

லஞ்சம் தொடர்பில் மேலும் ஓர் உதவி தலைமை இயக்குநர் கைது

Share:

கோலாலம்பூர்,ஜுன் 28-

கிள்ளான் பள்ளத்தாக்கில் 160 கோடி வெள்ளி மதிப்புள்ள இரண்டு நெடுஞ்சாலை நிர்மாணிப்புத் திட்டம் தொடர்பில் அரசாங்க சார்பு நிறுவனத்தைச் சேர்ந்த மேலும் ஒரு உதவி தலைமை இயக்குநரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM கைது செய்துள்ளது.

40 வயது மதிக்கத்தக்க அந்த உதவி தலைமை இயக்குநர், இன்று காலையில் SPRM தலைமையகத்திற்கு வரவழைக்கப்பட்டப் பின்னர் செய்து செய்யப்பட்டுள்ளதாக SPRM வட்டாரம் தெரிவித்துள்ளது.

சம்பந்தப்பட்ட சந்தேகப் பேர்வழி நெடுஞ்சாலை கட்டுமான குத்தகையை வழங்கியதற்காக நிறுவனம் ஒன்றிடமிருந்து கைமாறாக ஒரு லட்சத்து 46 ஆயிரம் வெள்ளி லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது.

Related News