Jul 29, 2026
Thisaigal NewsYouTube
காதல் முறிவு - மாணவி கடத்தல் !
தற்போதைய செய்திகள்

காதல் முறிவு - மாணவி கடத்தல் !

Share:

கெப்போங், ஜன - 7,

காதல் உறவைத் தொடர விருப்பம் இல்லை என 17 வயது மாணவி கூறியதால், கடந்த வெள்ளிக் கிழமை அன்று கெப்போங் இடைநிலைப் பள்ளியின் முன்புறம் அந்த மாணவியை 2 ஆடவர்களால் கடத்தப்பட்டுள்ளதாக கோம்பாக் போலீஸ் தலைவர் நோர் அரிஃபின் முகம்மட் நசீர் தெரிவித்தார்.

பள்ளியின் முன் நுழைவாசலில் இருந்து அந்த படிவம் 5 மாணவியை வலுக்கட்டாயமாக இழுத்து காருக்குள் தள்ளி கடத்தப்பட்டார். கடத்தப்பட்ட அவர் ஒரு HOME STAYக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். கடத்தி வைக்கப்பட்ட அம்மாணவி தாக்குதலுக்கு உட்படுத்தப்படாமல், அதே நாள் நண்பகல் 12.00 மணி அளபில் விடுவிக்கப்பட்டார்.

போலீஸ் மேற்கொண்ட விசாரணை நடவடிக்கையைட் தொடர்ந்து அன்றைய நாள் இரவு 11.30 மணி அளவில் இந்தக் கடத்தலில் சம்பந்தப்பட்டதாக நம்பப்படும் 19 முதல் 20 வயது மிக்க இரு ஆடவர்களும் ஒரு பெண்மணியும் கைது செய்யப்பட்டனர்.

கடத்தப்பட்ட இரு ஆடவர்களில் ஒருவர் தனது முன்னாள் காதலன் என அந்த மாணவி அடையாளம் காட்டி உள்ளார். அந்த ஆடவருடனான காதல் உறவை முறித்துக் கொண்டதால், அம்மாணவி கடத்தப்பட்டிருக்கிறார் என பெரித்தா ஹாரியான் கூறியுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் நேற்று தொடங்கி 4 நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு ஆட்கடத்தல் சம்பந்தமான குற்றவியல் சட்டம் 365இன் படி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மாணவி கடத்தப்பட்ட பிறகு, காலை மணி 10.36 மணி அளவில் மாணவையின் தாயார் கொடுத்த புகாரின் அடிபடையில் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்தக் கடத்தலில் ஒரு டோடோட்டா வகை காரும் Yamaha Y15ZR மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்