Oct 9, 2026
Thisaigal NewsYouTube

இல்ஹாம் டவர் கட்டடத்தைப் பறிமுதல் செய்வதற்கு எஸ்பிஆர்எம் விண்ணப்பம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
இல்ஹாம் டவர் கட்டடத்தைப் பறிமுதல் செய்வதற்கு எஸ்பிஆர்எம் விண்ணப்பம்

புத்ராஜெயா, ஜூன்.25-

முன்னாள் நிதி அமைச்சர் துன் டையிம் ஸைனுடினுக்குச் சொந்தமான 60 மாடி கொண்ட இல்ஹாம் டவர் கட்டடத்தைப் பறிமுதல் செய்வதற்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம், இன்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் விண்ணப்பம் ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.

கோலாலம்பூர் கேஎல்சிசிக்கு அருகில் ஜாலான் பின்ஜாலில் வீற்றிருக்கும் அந்த உயரமானக் கட்டடத்தைக் கொள்முதல் செய்வதில் பணம் எங்கிருந்து வந்தது என்பது குறித்து விளக்கம் அளிப்பதற்கு டையிம் ஸைனுடின் குடும்பத்தினர் தவறியதைத் தொடர்ந்து அந்தக் கட்டடத்தைப் பறிமுதல் செய்வதற்கு நீதிமன்ற நடவடிக்கையை எஸ்பிஆர்எம் நாடியுள்ளது.

டையிம் ஸைனுடினுக்குச் சொந்தமான இதர சொத்துக்களைப் பறிமுதல் செய்வது தொடர்பில் மேலும் சில விண்ணப்பங்களைச் சார்வு செய்வது குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருவதாக எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →