நாட்டில் அரிசி விலை உயர்வு திடீர் ஏற்றம் கண்டுள்ளதாக மக்கள் பரவலாக தங்கள் அதிருப்தியை பதிவு செய்துள்ள வேளையில் நெல் விதை உயர்வு கண்டுள்ளதாக கூறி, கெடா, நெற்களஞ்சியத்தை சேர்ந்த விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் நோக்கில் குறிப்பிட்ட கும்பல்கள் நெல் விதையை பதுக்கி வருகின்றன என்று அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதன் தொடர்பில் கடந்த 2008 ஆம் ஆண்டிலிருந்து நடப்பில் உள்ள நெல் விதைக்கான விலை கட்டுப்பாட்டை மறு ஆய்வு செய்யுமாறு அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளர்.








