Oct 18, 2026
Thisaigal NewsYouTube

மூத்தக் குடிமக்களின் உரிமைகள் விவாதிக்கப்படும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மூத்தக் குடிமக்களின் உரிமைகள் விவாதிக்கப்படும்

கோலாலம்பூர், அக்டோபர் 02-

மூத்த குடிமக்களின் உரிமைகள் மற்றும் அவர்கள் நலன் சார்ந்த அம்சங்கள் குறித்து விவாதிப்பதற்கு சுஹாகம் எனப்படும் மலேசிய மனித உரிமை ஆணையம் மாபெரும் ஆய்வரங்கை ஏற்பாடு செய்துள்ளது.

மூத்தக்குடிமக்கள் சம்பந்தப்பட்ட பொருளாதார,சமூகவியல் மற்றும் கலாச்சார உரிமைகள் சார்ந்த விவகாரங்களை விவாதிக்கும் களமாக இந்த ஆய்வரங்கம் விளைங்கிடும் என்று சுஹாகம் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் ஹிஷாமுதீன் முஹமட் யூனுஸ் தெரிவித்தார்.

மலேசியாவில் உள்ள மூத்தக்குடி மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்ததுவதற்கு தேவையான தீர்வுகளை ஏற்படுத்துவதற்கு இது வழிவகுக்கும் என்று கோலாலம்பூரில் இந்த ஆய்வரங்கத்தை தொடங்கி வைத்து உரையாற்றுகையில் ஹிஷாமுதீன் முஹமட் மேற்கண்டவாறு கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →