May 20, 2026
Thisaigal NewsYouTube
ஆஸ்திரேலிய பிரஜைக்கு 100 வெள்ளி அபராதம்
தற்போதைய செய்திகள்

ஆஸ்திரேலிய பிரஜைக்கு 100 வெள்ளி அபராதம்

Share:

சுபாங் ஜெயா பேரங்காடியில் வாகனம் நிறுத்தும் பகுதியில் தூண் ஒன்றில் வெளிப்படையாக சிறுநீர் கழித்த குற்றத்திற்காக ஓர் ஆஸ்திரேலிய பிரஜைகைக்கு ஷா ஆலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 100 வெள்ளி அபராதம் விதித்தது.

சின் பீட்டர் என்ற 32 வயதுடைய அந்த ஆஸ்திரேலி பிரஜை தனக்கு எதிரான குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து மாஜிஸ்திரேட் ஷாஷா டயானா சப்து இத்தண்டனையை விதித்தார். கடந்த நவம்பர் 16 ஆம் தேதி இரவு 10.51 மணியளவில் யுஎஸ்ஜேவில் 10 இல் உள்ள சிட்டி மோலில் அந்த ஆஸ்திரேலிய பிரஜை புரிந்த ஒழுக்கக் கேடான இச்செயல் குறித்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டதைத் தொடர்ந்து மக்களின் ஆத்திரத்திற்கு ஆளானார்.

Related News