Jul 7, 2026
Thisaigal NewsYouTube
பெக்கோக் சட்டமன்றத் தொகுதி: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் டே யோக் ஜியுன் மக்களுக்கு வேண்டுகோள்
தற்போதைய செய்திகள்

பெக்கோக் சட்டமன்றத் தொகுதி: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் டே யோக் ஜியுன் மக்களுக்கு வேண்டுகோள்

Share:

லாபிஸ் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் பெக்கோக் சட்டமன்றத் தொகுதி அமைந்திருந்தாலும், கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக லாபிஸ் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வரும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் பாங் ஹொக் லியோங் தொகுதி மக்களை மிகச் சிறந்த முறையில் கவனித்து வருகிறார். எனவே, வரவிருக்கும் தேர்தலில் பெக்கோக் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் தமக்கு மக்கள் பேராதரவு வழங்கி வெற்றியடையச் செய்ய வேண்டும் என்று பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் டே யோக் ஜியுன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இத்தொகுதியில் உள்ள தேசியப் பள்ளிகள், தமிழ்ப்பள்ளிகள் மற்றும் சீனப்பள்ளிகளுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் நாடாளுமன்ற உறுப்பினர் பாங் ஹொக் லியோங் தொடர்ந்து சீரிய முறையில் செய்து கொடுத்து வருகிறார். இந்த நிலையில், ஓர் ஆசிரியராகவும் கல்வியாளராகவும் இருக்கும் தாம், பெக்கோக் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், இத்தொகுதியின் கல்வி வளர்ச்சிக்கும் மாணவர்களின் மேம்பாட்டிற்கும் இன்னும் கூடுதலான பங்களிப்பை வழங்க முடியும் என்று டே யோக் ஜியுன் உறுதியளித்தார்.

ஒரு தொகுதியின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு நாடாளுமன்ற உறுப்பினரின் பங்களிப்பு எவ்வளவு முக்கியமோ, அதே அளவு சட்டமன்ற உறுப்பினரின் செயல்பாடும் அவசியமாகும். அந்த வகையில், ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினர் செய்து வரும் நற்பணிகளை அடித்தளமாகக் கொண்டு, கல்வித் துறையில் தனக்குள்ள அனுபவத்தின் மூலம் பெக்கோக் தொகுதியை மேலும் ஒரு படி மேலே கொண்டு செல்ல டே யோக் ஜியுன் திட்டமிட்டுள்ளார். வாக்காளர்கள் இவருக்கு வழங்கும் ஆதரவு, தொகுதியின் கல்வி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல உதவும் என்பதில் ஐயமில்லை.

Related News