Jul 31, 2026
Thisaigal NewsYouTube
சைகையோடு தேசப்பக்திப் பாடலைப் பாடிய ஆசிரியர்கள்
தற்போதைய செய்திகள்

சைகையோடு தேசப்பக்திப் பாடலைப் பாடிய ஆசிரியர்கள்

Share:

கோலாலம்பூர் , ஆகஸ்ட் 20-

உடற்பேறு குறைந்த மாணவர்களுக்கான சைகை மொழியில் 'Keranamu Malaysia' தேசப்பக்தி பாடலை இரண்டு ஆசிரியர்கள் மொழிபெயர்த்து காட்டும் காணொலி சமூக ஊடகங்களில் பரவலாகி மக்களிடையே அதிக வரவேற்ப்பை பெற்று வருகிறது.

ஆசிரியராகப் பனிபுரியும் கௌசர் கைருதீன் தமது டிக்டாக் கணக்கில் பகிர்ந்த அந்த ஒரு நிமிட காணொலியில், அவரும் ஒர் ஆசிரியையும் பள்ளி சபைக்கூடத்தில் பாடலைச் சைகை மொழியில் பாடி மாணவர்களை உற்சாகப்படுத்தியது பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது.

அதுமட்டுமின்றி, சுதந்திர மாதத்தில் மக்களிடையே ஒற்றுமையுணர்வை மேலும் வலுப்படுத்த இது போன்ற காணொலி அவசியம் என்றும்; அந்த இரு ஆசிரியர்களுக்கு நன்றிகளையும் தெரிவித்தும் பலர் கருத்து பகிர்ந்துள்ளனர்.

Related News