Dec 2, 2025
Thisaigal NewsYouTube
வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வேலை வாய்ப்பு சந்தை முக்கிய பங்காற்றுகிறது
தற்போதைய செய்திகள்

வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வேலை வாய்ப்பு சந்தை முக்கிய பங்காற்றுகிறது

Share:

வேலையில்லாத் திண்டாட்டத்தைக் குறைத்து, மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுத்துவதற்கு வேலை வாய்ப்பு சந்தைகள் முக்கிய பங்காற்றுகிறது என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வி.கணபதிராவ் தெரிவித்துள்ளார்.

வேலைச் சந்தையில் பொதுமக்கள் பங்கேற்பதை ஊக்குவிக்க, அரசாங்கம் தொடர்ந்து தீவிர கவனம் செலுத்தி வருகிறது என்றும், மக்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருவதன் மூலம் சமூகப் பொருளாதாரத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தவும் முடியும் என்றும் கணபதிராவ் விவரித்தார்.

அந்த வகையில், மனிதவள அமைச்சின் ஆதரவோடு சொக்சோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் நாடு தழுவிய அளவில் வேலை வாய்ப்பு கண்காட்சி மிகப்பெரிய அளவில் இன்று கிள்ளான், டேவான் ஹம்ஸாவில் நடைபெற்ற வேளையில், இந்த நிகழ்ச்சியில் 7000த்திற்கு மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்க வழிசெய்துள்ளதாக சிலாங்கூர் மாநில சமூக பொருளாதார மேம்பாட்டு ஆட்சிக்குழுவின் தலைருமான கணபதி ராவ் குறிப்பிட்டார்.

Related News