தீபாவளி திருநாளையொட்டி வரும் நவம்பர் 9 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரையில் சிங்கப்பூர், வூட்லேன்ஸ் மற்றும் துவாஸ் ஆகிய சோதனை சாவடி மையங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம் என்று சிங்கப்பூரின் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையமான ஐசிஏ அறிவித்துள்ளது.
வார இறுதியில் தீபாவளி திருநாள் மற்றும் பள்ளிகளின் ஆண்டு இறுதி தவணை விடுமுறை தொடங்கப்படவிருப்பதால் இவ்விரு பிரதான சோதனை சாவடி மையங்களிலும் வழக்கத்திற்கு மாறாக, போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று சிங்கப்பூரின் ஐசிஏ ஆணையம் தெரிவித்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் 6 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை கொண்டாடப்பட்ட சிறார் தினத்தில் 12 லட்சத்து 70 ஆயிரம் வாகனங்கள் அந்த சோதனை சாவடிகளை பயன்படுத்தியுள்ளன என்று அது குறிப்பிட்டுள்ளது.








