பேரங்காடி மையம் ஒன்றில் பொருட்களை களவாடியப் பின்னர் தப்பிக்க முயற்சித்த முதியவர் ஒருவரை பிடிக்கும் முயற்சியில் இரு போலீஸ்காரர்கள் கத்தி வெட்டு தாக்குதலுக்கு ஆளானார்கள். இச்சம்பவம் இன்று காலை 10.45 மணி அளவில் கூலிம் வட்டாரத்தில் உள்ள லோட்டஸ் பேராங்காடியில் நிகழ்ந்தது.
தப்பிக்க முற்பட்ட 82 வயது முதியவரை தடுத்து நிறுத்த அந்த இரு போலீஸ்காரர்கள் போராடிய போது இந்த தாக்குதல் நடந்துள்ளது என்று கூலிம் மாவட்ட தலைமை காவல்துறை அதிகாரி சூப்ரிண்டெண்டன் ரிட்சுவான் பின் சலே தெரிவித்தார்.
முதியவர் ஒருவர் பொருட்களை களவாடிக்கொண்டு அந்த பேரங்காடியிலிருந்து வெளியேறுவதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் 30 வயது மதிக்கத் தக்க அந்த போலீஸ்காரர்கள் அந்த முதியவரை தடுத்து நிறுத்த முனைந்ததாக ரிட்சுவான் குறிப்பிட்டார்.
இச்சம்பவத்தில் இன்ஸ்பெக்டர் அந்தஸ்தை கொண்ட போலீஸ் அதிகாரிக்கு நெஞ்சுப்பகுதியில் காயம் ஏற்பட்டுள்ள வேளையில் அவரை காப்பாற்ற முயற்சித்த டி 9 பிரிவைச் சேர்ந்த மற்றொரு போஸீஸ் அதிகாரி கால் பகுதியில் வெட்டுக்காயத்திற்கு ஆளானார்.
கைது செய்யப்பட்ட அந்த முதியவர், ஏற்கனவே குற்றப்பதிவுகளை கொண்டுள்ளார். அவர் தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக ரிட்சுவான் குறிப்பிட்டார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை


