கூச்சிங், செப்டம்பர்.18-
சரவாக், சமரஹான் ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது முதலைத் தாக்கியதில், 12 வயது சிறுவன் உயிரிழந்ததாக நம்பப்படுகின்றது.
இச்சம்பவம் நடந்த இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, சிறுவனின் உடல் மீட்கப்பட்டதாக சரவாக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது.
முதலைத் தாக்குதல் நடந்த இடத்திலிருந்து சுமார் 10 மீட்டர் தொலைவில் அச்சிறுவனின் சடலம் மீட்கப்பட்டதாகவும், முதலைக் கடித்ததால் சிறுவனின் வயிற்றுப் பகுதியில் காயங்கள் இருந்தன என்றும் இன்று வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நடந்த போது, ஆற்றில் அலறல் சத்தம் ஒன்று கேட்டதாகவும், சில நிமிடங்களில் அது நின்று விட்டதாகவும், கம்போங் எம்பிலாவைச் சேர்ந்த கிராமவாசிகள் தெரிவித்துள்ளனர்.








