Jun 6, 2026
Thisaigal NewsYouTube
மலையேற்றத்தில் மாயமான ஜஸ்லிந்தா சலுடின் விட்டுச் சென்ற குறிப்பு - தொடர்ந்து நீடிக்கும் மர்மம்
தற்போதைய செய்திகள்

மலையேற்றத்தில் மாயமான ஜஸ்லிந்தா சலுடின் விட்டுச் சென்ற குறிப்பு - தொடர்ந்து நீடிக்கும் மர்மம்

Share:

தாப்பா அருகேயுள்ள குனுங் பத்து புத்தே மலையில் மாயமான 49 வயதான ஜஸ்லிந்தா சலுடின், அம்மலையின் உச்சியை அடைந்திருப்பது உறுதியாகியுள்ளது.

மலையின் உச்சிப் பகுதியில், “ஹாஃபிஸ் அம்பிக் காம்பார் அக்கா டே சம்பாய்” அதாவது, ஹபிஸ், படம் எடுத்து நான் உச்சியை அடைந்துவிட்டேன் என்ற வாசகத்தை ஜஸ்லிந்தா எழுதி வைத்திருந்ததாக மலையேற்ற வழிகாட்டி ஹாஃபிஸ் தெரிவித்துள்ளார்.

மலையேற்றத்தின் தொடக்கத்திலேயே ஜஸ்லிந்தாவின் கைப்பேசி மின்கலம் காலியானதால், தான் உச்சியை அடைந்ததை தெரிவிக்கவே அவர் அந்தக் குறிப்பை எழுதி வைத்திருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மே 24-ஆம் தேதி காலை 10 மணியளவில் ஜஸ்லிந்தா மலை உச்சியை அடைந்திருக்கலாம் என்றும், தான் காலை 10.45 மணியளவில் அங்கு சென்றடைந்து, 11 மணியளவில் அந்த குறிப்பைக் கண்டதாகவும் ஹாஃபிஸ் தெரிவித்துள்ளார்.

என்றாலும், உச்சியை அடைந்த பிறகு அவர் எந்த பாதையில் சென்றார் அல்லது எங்கு சென்றார் என்பதற்கான எந்தத் தடயத்தையும் விட்டுச் செல்லாததால், கடந்த 1 வாரமாக நடைபெற்று வரும் தேடுதல் பணியில் தொடர்ந்து மர்மம் நீடித்து வருகின்றது.

Related News

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட்  ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்