Sep 25, 2026
Thisaigal NewsYouTube
கட்டுப்பாட்டை இழந்த கார் வீட்டின் கூரையில் பாய்ந்தது – 2 பேர் காயம்
தற்போதைய செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த கார் வீட்டின் கூரையில் பாய்ந்தது – 2 பேர் காயம்

Share:

ஸ்ரீ மெனந்தி பகுதியில் நேற்று இரவு கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று சாலையிலிருந்து விலகி மலையடிவாரத்தில் இருந்த வீட்டின் கூரையில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.

ஸ்ரீ மெனந்தியிலிருந்து, செரம்பான் நோக்கி சென்ற அந்த காரானது, காம்பங் தஞ்சோங் பாச்சாங் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, சாலையை விட்டு விலகி கீழே இருந்த வீட்டின் கூரையில் மோதி விழுந்ததாக கோலா பிலா மாவட்ட போலீஸ் தலைவர் முஸ்தபா ஹுசின் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்து நடந்த நேரத்தில் அவ்வீட்டில் யாரும் இல்லாததால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், காரில் பயணித்த இருவர் லேசான காயங்களுடன் கோலா பிலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேவேளையில், 63 வயதான கார் ஓட்டுநரும் மற்றொரு பயணியும் காயமின்றி உயிர் தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

கட்டுப்பாட்டை இழந்த கார் வீட்டின் கூரையில் பாய்ந்தது – 2 ... | Thisaigal News