Jun 6, 2026
Thisaigal NewsYouTube
மலேசியாவிற்கு கடற்படை தாக்குதல் ஏவுகணைகளை விற்பனை செய்ய அமெரிக்கா பரிசீலனை - தற்காப்பு அமைச்சர் தகவல்
தற்போதைய செய்திகள்

மலேசியாவிற்கு கடற்படை தாக்குதல் ஏவுகணைகளை விற்பனை செய்ய அமெரிக்கா பரிசீலனை - தற்காப்பு அமைச்சர் தகவல்

Share:

மலேசிய கடற்படைக் கப்பல்களுக்குத் தேவையான கடற்படை தாக்குதல் ஏவுகணையான என்.எஸ்.எம்-ஐ விநியோகம் செய்வது குறித்து அமெரிக்கா பரிசீலிப்பதாகத் தெரிவித்துள்ளது.

மலேசியாவிற்கான என்.எஸ்.எம் ஏற்றுமதி உரிமத்தை, நோர்வே அரசாங்கம் இரத்து செய்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவுடன் இப்பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தற்காப்பு அமைச்சர் காலித் நோர்டின் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் நடைபெறும் ஷாங்ரி-லா உரையாடலில் கலந்துகொள்வதற்காக நடந்த இருதரப்பு சந்திப்பின்போது, அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத்யிடம் இந்த விவகாரம் எழுப்பப்பட்டதாகவும் காலித் நோர்டின் குறிப்பிட்டுள்ளார்.

நோர்வே தயாரிக்கும் அதே வகை ஏவுகணையை அமெரிக்க நிறுவனமும் தயாரித்து வரும் நிலையில், அந்த ஏவுகணைகளை மலேசியாவுக்கு விற்பனை செய்ய அமெரிக்கா அனுமதி வழங்குமா? என்று தாங்கள் கேள்வி எழுப்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, நோர்வேயின் காங்ஸ்பெர்க் டிஃபென்ஸ் & ஏரோஸ்பேஸ் தயாரிக்கும் நேவல் ஸ்டிரைக் ஏவுகணை அமைப்பை, அமெரிக்கக் கடற்படையும் ஏற்கனவே கொள்முதல் செய்துள்ளது.

மேலும், அமெரிக்கக் கடற்படைப் பிரிவானது, அந்த ஏவுகணைகளின் தரைமட்ட பதிப்பை பயன்படுத்தி வருகின்றது.

இந்நிலையில், அமெரிக்காவின் ரேதியோன் நிறுவனம், காங்ஸ்பெர்க் நிறுவனத்துடன் இணைந்து இந்த ஏவுகணைக்கான ஏவுதளங்களை தயாரித்து வருகின்றது.

அதேவேளையில், தனது விரிவான உற்பத்தி வலையமைப்பைப் பயன்படுத்தி ஏவுகணை மற்றும் அதன் முக்கிய உதிரிபாகங்களையும் அமெரிக்காவில் உற்பத்தி செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட்  ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்