Sep 25, 2026
Thisaigal NewsYouTube
பள்ளிகளிலும் பரவி வரும் ‘ஜாம்பி போதை’ – போலீசார் கடும் எச்சரிக்கை
தற்போதைய செய்திகள்

பள்ளிகளிலும் பரவி வரும் ‘ஜாம்பி போதை’ – போலீசார் கடும் எச்சரிக்கை

Share:

சில முறை மட்டுமே புகைத்தாலும் தீவிர போதைக்கு அடிமையாக்கும் போதைப்பொருள் கலந்த வேப் கருவிகள் தற்போது பொழுதுபோக்கு மையங்களிலும், சில பள்ளிகளிலும் பரவி வருவதாக அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, “ஜாம்பி போதை” அல்லது “பியாவ் பியாவ்” என அழைக்கப்படும் ஃபெண்டானில் கலந்த வேப் பொருட்கள் புழக்கத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளன.

இது இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் அதிகரித்து வரும் புதிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

இது குறித்து பினாங்கு போலீஸ் தலைவர் அசிசி இஸ்மாயில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதிய வகை செயற்கை போதைப்பொருட்கள் வழக்கமான சிறுநீர் பரிசோதனைகளில் எளிதில் கண்டறியப்படாததால், அவற்றின் பயன்பாடு மிகவும் ஆபத்தானதாக வகையில் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக பள்ளி மாணவர்கள் மற்றும் பதின்ம வயதினரிடையே இது அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் விவரித்துள்ளார்.

மேலும், பரிசோதனையில் சிக்காமல் தப்பிக்கலாம் என்ற தவறான நம்பிக்கையால் இளைஞர்கள் இந்த போதைப்பொருட்களை பயன்படுத்தும் அபாயம் அதிகரித்து வருவதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related News