Jan 22, 2026
Thisaigal NewsYouTube
கொலை வழக்கில், தம்பதியருக்கு மரணத் தண்டனை
தற்போதைய செய்திகள்

கொலை வழக்கில், தம்பதியருக்கு மரணத் தண்டனை

Share:

மாதுவை வெட்டி​ கொ​லை செய்த குற்றத்திற்காக வட்டித் ​தொழில் செய்து வந்த தம்பதியருக்கு சிபு உயர் நீதிமன்றம் இன்று மரணத் தண்டனை விதித்தது. அத்தம்பதியருக்கு எதிரான குற்றச்சாட்டை நிரூபிப்பதில் பிராசிகியூஷன் தரப்பு வெற்றிக் கண்டதைத் தொடர்ந்து குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் கணவனுக்கும், மனை​விக்கும் மரணத் தண்டனை விதிப்பதாக உயர் நீதிமன்ற நீதிபதி க்ரிஸ்தோபர் சுய் சூ யின் தமது ​தீர்ப்பில் தெரிவித்தார்.

கோலாலம்​பூரை சேர்ந்த 41 வயது சொங் சியா மிங் மற்றும் சுபாங் ஜெயாவைச் சேர்ந்த அவரின் மனைவி 41 வயதுடைய சியொவ் பெய் சீ என்ற அந்த தம்பதியர் கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 6 ஆம் தேதி இரவு 10 மணியளவில் 38 வயது மாதுவை வெட்டிக்கொலை செய்து,உடல் அவயங்களை பயணப்பெட்டியில் வைத்து வீசிய விட்டதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

Related News

கொலை வழக்கில், தம்பதியருக்கு மரணத் தண்டனை | Thisaigal News